சிறப்புகள்

சிறப்புகள்

சிறப்பு பெயர்கள்

தாமரைகுளம்பதி,தாமரையூர்பதி, தாமரைபதி, தாமரைகுளம் ஸ்ரீமன் நாராயண சுவாமிபதி, ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில், அகிலம் இயற்றிய பதி, விருந்துண்டபதி போன்ற சிறப்பு பெயர்களை பெற்றது.

ஐம்பதிகளுள் ஒன்று

சுவாமிதோப்புபதி, தாமரைகுளம்பதி, அம்பலபதி, முட்டபதி, பூப்பதி ஆகிய அய்யாவழி வழிபாட்டு தலங்கள் மட்டும் பதி என்ற சிறப்பை பெறுகிறது. இவை பஞ்சபதிகள் என்றும் ஐம்பதிகள் என்றும் சிறப்பு பெறுகிறது.

அகிலத்திரட்டு அம்மானை

தாமரைகுளம்பதியில் வைத்துதான் அரிகோபாலசீடர் அய்யாவழி புனிதநூலான அகிலத்திரட்டு அம்மானை நூலை இயற்றினார்.